UNNATHATHIL OSANNA Song Lyrics Tamil

UNNATHATHIL OSANNA Song Lyrics

பல்லவி
(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே…கோவேறு கழுதைக்குட்டி நானே…
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே…) x 2
(ஓ…..ஓஹோ…
ஆ….ஆஹா….) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 2

கோரஸ்
“உன்னதத்தில் ஓசன்னா” விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது…
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது…
“உன்னதத்தில் ஓசன்னா” வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்…
தேவநாமம் உயரணும்…
உலக மக்கள் அறியணும்…
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்…
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்…

அனுபல்லவி
1.(ஏழ்மைக் கோலம் ஏற்ற ராஜா என்னை கட்டுண்ட நிலையில் கண்டாரே…
சுமத்தப்பட்டும் அடிக்கப்பட்டும் ஒடுக்கப்படும் வாழ்வை அறிந்துக்கொண்டாரே…)X 2
(இயேசுவினாலே சின்னமறி நான் விடுதலைப் பெற்றேன்…
இயேசுவே உந்தன் கட்டுகள் நீக்கி தருவார் விடுதலை…) x 2
(அவரில்லாமல் இரட்சிப்பு இல்லை…
அவரை அல்லாமல் உனக்கு விடிவு இல்லை) x 2

“உன்னதத்தில் ஓசன்னா” விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது…
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது…
“உன்னதத்தில் ஓசன்னா” வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்…
தேவநாமம் உயரணும்…
உலக மக்கள் அறியணும்…
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்…
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்…

சரணம்
2.(உலகம் ஆளும் இயேசுராஜா என்னை குறிப்பாக தெரிந்துக் கொண்டாரே…
பாரம் உண்டு கஷ்டம் உண்டு, எதையும் தாங்கிடவே பெலன் தந்தாரே…) x 2
(இயேசுவை சுமந்து முன்னேறி நடந்து சென்றேன் நானே… வாழ்த்திட நல்ல உள்ளங்கள் உண்டு என்னை சுற்றித் தான்…) x 2
(அவரில்லாமல் நான் ஒன்றும் இல்லை…
அவரை சுமக்காமல் உனக்கு வாழ்வு இல்லை…) x 2

“உன்னதத்தில் ஓசன்னா” விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது…
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது…
“உன்னதத்தில் ஓசன்னா” வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்…
தேவநாமம் உயரணும்…
உலக மக்கள் அறியணும்..
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்..
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்..

(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே…கோவேறு கழுதைக்குட்டி நானே…
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே…) x 2
(ஓ…..ஓஹோ…ஓஹோஹோ…
ஆ….ஆஹா….ஆஹாஹா…) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 4

UNNATHATHIL OSANNA Video Song Tamil Christian

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top