Skip to content

Ummaithaan Ninaikiren Song Lyrics Tamil

Ummaithaan Ninaikiren Song Lyrics in Tamil

உம்மைதான் நினைக்கின்றேன்
வசனம் தியானிக்கின்றேன்
நீர் எனக்கு துணையாயிருப்பதால்
நிழலில் அகமகிழ்கின்றேன்

இயேசய்யா இயேசய்யா
இரட்சகரே இம்மானுவேல்

1.தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடுகிறேன் – –
தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்
என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா

2.உம் இரக்கம் உம் தயவு
மேலானது உயிரைவிட
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன்ன்

3.சுவையான உணவு உண்பதுபோல்
திருப்தியானேன் உம் உறவில்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிப்பேன்
அப்பாவின் கிருபையில்தான் அனுதினம் வாழ்கின்றேன்

4.படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவுநேரம் தியானிக்கின்றேன்
உமது வலது கரம் தினமும் தாங்குதைய்யா
உம்மையே இறுதிவரை விடாது பற்றி கொண்டேன்

Ummaithaan Ninaikiren Video Song Tamil

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now