Thedi Vantha Anbai Song Lyrics in Tamil
தேடி வந்த அன்பை
என்னவென்று சொல்வேன்
சொல்வதறியாமல் திகைத்து போய் நின்றேன்
நிலையில்லா ஜீவனில்
நிஜமென்று கண்டேன்
இயேசு என் அன்பரை
ஏதென்று சொல்வேன்
மணவாளனே என் ஆயனே
மணவாளனே என் ராஜனே
ஏங்கும் மனதிற்குள் வந்து
துணையாக வாழும் மணவாளன்
நான் கேட்கும் விருப்பங்கள் தந்து
என் வாழ்வில் அழகு பார்க்கும் ராஜன்
கண்களில் ததும்பிடும்
கண்ணீர் துடைப்பார்
என் நெஞ்சத்தில் நிலைப்பார்
நான் கையிடும் ஸ்வப்னங்களில் இருப்பார்
துணையாய் யாத்திரையில் வருவார்
அறியாமல் தடுமாறும்
என் வாழ்வில் துணை நீரே
தடம் புரண்டும் நிலை மாண்டும்
நிறம் மாறா நிஜம் நீரே