வாக்குத்தத்தம் செய்தவர் | Vaakkuthatham Seidhavar
Tamil Christian Lyrics Songs
lyricist: Bro Nelson Jasper W
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா
உண்மை தேவன் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
பழையவர்கள் ஒழிந்துபோகும் வாக்குத்தத்தம்
நிறைவேறும் விசுவாசத்தில் உறுதிப்படு
வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
வெற்றியாய் நடத்திடுவார் இயேசு ராஜா
வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
என் தோல்வியெல்லாம் வெற்றியாகுமே (4)
திறந்த வாசலை உனக்கு முன்பாக
வைத்திருக்கும் தேவனவர்
வெண்கலத் தாழ்ப்பாள்களை
உடைத்தெறிந்து நுழையச் செய்வார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்
தேவனாயிருக்கிற கர்த்தர் தாமே
வலது கையை பிடித்து என்னை
பயப்படாதே நான் உனக்கு துணையாய்
நிற்கிறேன் என்று சொன்னார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்
வியாதியை நீக்கும் தேவனவர்
வியாதியை நீக்கி சுகமாக்குவார்
கிறிஸ்துவின் நாமத்தினால்
சுகத்தைப் பெற்று துதி செலுத்துவேன்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்