Sengadal Naduvae Song Lyrics in Tamil
பல்லவி
செங்கடல் நடுவே உமைப் பணிந்திடுவேன்
யோர்தான் அருகே உமைத் துதித்திடுவேன்
நாளும் எந்த நாளும் உமைப் போற்றி போற்றி பணிவேன்- பணிவேனே
சரணங்கள்
- இயேசுவே உம்மை நாடி பாவி நான் வந்தேன்
பாவத்தை மன்னித்து எனை இரட்சித்தீர்
உலகத்தின் நீதியையும் தேடிடுவேனோ உமது நீதியையே சுதந்தரிப்பேன்
யாரென்ன சொன்னாலும் கலங்கிட மாட்டேன்
எத்துன்பம் வந்தாலும் சோர்வடையேன்
என் ராஜா எனை நீரே தினம் காத்து வந்தீர்
என் தாயைப் போல் நீரும் எனை தேற்றி வந்தீர்
இனி வரும் நாளெல்லாம் உமக்காக வாழ்வேன் - உம் அன்பைப் பாடிடவே வார்த்தைகள் இல்லை
எந்தன் குற்றங்களை மூடிடுமே
உம்மோடு இருக்கையிலே கவலைகள் இல்லை
உமது நாமம் சொல்ல ஓடிடுமே
மகிமையின் பாத்திரரே உமைத் துதிப்பேன்
தாவீதின் புத்திரரே உமைப் பணிவேன்
என் தாய் நீர் உம் சேய் நான் என்ற உறவின் படி
உம் பின்னே நான் சிலுவை தனை சுமந்திடுவேன்
இனி வரும் நாளெல்லாம் உம்மை பிரதிபலிப்பேன்