Dhasarae Song Lyrics in Tamil
Tamil Lyrics
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
- வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்